Logo

பயங்கரவாத தடை சட்டத்தால் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றது!

பயங்கரவாத தடை சட்டத்தால் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றது!
 | 

பயங்கரவாத தடை சட்டத்தால் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றது!


இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் ரத்து செய்யப்படாமை குறித்து சர்வதேச  மனித உரிமை கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இன்னும் ரத்து செய்யவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் இன்னமும் தமிழர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு வருகின்றனர். சிலர் விசாரணைகள் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழர் பகுதிகளில் மக்கள் மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கைது செய்யப்படும் நபர்களை பல ஆண்டுகளாக சிறைவைப்பதற்கு இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் எந்த வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை பாதுகாப்பு குறித்து உண்மையாகவே கவனம் செலுத்தப்படுவதாக இருந்தால் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து செய்வது அவசியமாகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி, மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நடைபெறுகின்றது. 

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதாக இலங்கை அரசு கூறுகின்ற போதும் செயல்பாட்டில் எந்த முயற்சிகளும் செய்யப்படவில்லை. இலங்கையில் தொடர்ந்து சித்திரவதைகள் நடைபெறுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் உதவுகின்றது" என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP