இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து
 | 

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து


இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ , ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். அவர் தனது பயணத்தில் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார்.

 இந்நிலையில், இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தனிநபர் மற்றும் நிறுவன ஆற்றல்களை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது இலங்கையின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்க செயல்பாடுகள் குறித்து அதிபர் ஜோகோ விடோடோவுக்கு மைத்திரிபால சிறிசேனா விளக்கம் அளித்தார்.

இதையடுத்து மருத்துவ உபகரண உற்பத்தி, ரயில்வே துறையின் வளர்ச்சி திட்டங்கள், கல்வித்துறை ஆகியவற்றுக்கு இலங்கைக்கு உதவும் வகையில் 3 ஒப்பந்தங்களில் இந்தோனேசியா கையெழுத்திட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP