புலிகளுக்கு நிதி திரட்டிய 13 பேர் மீது வழக்கு!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்த்த குற்றச்சாட்டில், 13 பேர் மீது ஸ்விட்சர்லாந்து நீதிமன்றம் விசாரணை.
 | 

புலிகளுக்கு நிதி திரட்டிய 13 பேர் மீது வழக்கு!


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில், 13 பேர் மீது ஸ்விட்சர்லாந்து நீதிமன்றம் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலக்கட்டத்தில், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நல் வாழ்வுக்காக வெளிநாடுகளில் குடிபெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இப்படி சேர்க்கப்பட்ட நிதி ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு பெரிதும் உதவியது. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி, 13 பேர் மீது ஸ்விட்சர்லாந்து நீதிமன்றத்தில் பொய்யான ஆவணங்கள், பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்த 13 பேரும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள், ஸ்விட்சர்லாந்து புலம் பெயர் தமிழர்களின் பெயரில், போலியான ஊதிய சான்றுகளை வங்கிகளில் காட்டி, இந்திய மதிப்பில் 97.5 கோடி கடன் பெற்றுள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட பணம் சிங்கப்பூர் மற்றும் துபாய் வழியாக தமிழீழ விடுதலை புலிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் மிகத் தீவிரமாக நடந்த 2009ம் ஆண்டு வரை பணத்தை அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த பணம் விடுதலைப் புலிகள் கைகளுக்கு சென்று சேர்ந்ததா என்பது பற்றிய தகவல் இல்லை. ஆனால் ஸ்விட்சர்லாந்தில் இருந்து அனுப்பட்ட பணத்தை வைத்து புலிகள் ஆயுதங்கள் வாங்கியுள்ளனர் என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த விசாரணை குறித்து ஸ்விட்சர்லாந்து ஈழத் தமிழர் கவுன்சில் தலைவர் அண்ணா அன்னூர் கூறுகையில், "தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைக்காக ஸ்விட்சர்லாந்து பார்க்கவில்லை. இரண்டு குழுக்களிடையே நடந்த சண்டையாகவே பார்க்கப்படுகின்றது. சந்தேகத்தின் பெயரில் 13 பேர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. இதற்கு பதில், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை ஸ்விட்சர்லாந்து அரசு விசாரணை செய்ய வேண்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP