குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்

இலங்கையில் நேற்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் சர்வதேச சதி இருப்பதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பு, நீர் கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று நிகழ்ந்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 300 பேர் பலியாகினர்.
 | 

குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்

இலங்கையில் நேற்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள், சர்வதேச அளவிலான பயங்கரவாத அமைப்புகளின் பங்களிப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று இலங்கை அரசு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு, நீர் கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று நிகழ்ந்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை சுமார் 300 பேர் பலியாகினர்.
தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர குண்டுவெடிப்பு உலகையே உலுக்கியுள்ளது. இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே கூறியதாவது:
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை இலங்கையில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) நடத்தியிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், சர்வதேச அளவிலான பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்  பங்களிப்பு இல்லாமல், இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தீவிர தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கொழும்பு பிரதான பேருந்து நிலையம் அருகே, 87 டெட்டனேட்டர் வெடிபொருள்களை போலீஸார் கண்டறிந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP