பிரச்னை என்றால் விஜய்யோ, சூரி­யாவோ வரப்போவதில்லை - இலங்கை அமைச்சர் பேச்சு

பிரச்னை என்றால் சூரியாவோ, ஆரியாவோ வரப்போவதில்லை - இலங்கை அமைச்சர் பேச்சு
 | 

பிரச்னை என்றால் விஜய்யோ, சூரி­யாவோ வரப்போவதில்லை - இலங்கை அமைச்சர் பேச்சு


இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்னை வரும் போது படத்தில் வரும் இந்­திய நடி­கர்­க­ளான விஜய்யோ, அல்­லது சூரி­யாவோ, ஆரி­யாவோ வரப்­போ­வ­தில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரும் மாதம் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தபால் மூலம் வாக்குப்பதிவு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், "கொழும்பு மாவட்­டத்தில் தமி­ழர்­களின் தலை­ந­க­ராக கொச்­சிக்­க­டை உள்ளது. கொச்­சிக்­க­டை­யா­னது வீரம் செறிந்­த­வர்கள் வாழும் பகு­தி­.

வட­ கொ­ழும்­பி­லேயே தமிழ் மக்கள் பெரு­ம­ளவில் வாழ்­கின்­றனர். எனவே கொழும்பு வடக்கில் வாழும் தமி­ழர்­களும் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களும் இந்த தேர்தலில் தமது பலத்தை காண்­பிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.

தற்­போது கொச்­சிக்­கடை உட்­பட கொழும்பில் சன் டி.வி. விஜய் டி.வி, உட்­பட இந்­திய தொலைக்காட்சிகளை தமிழ் மக்கள் பெரிதும் பார்­வை­யிட்டு வருகின்றனர். 

இவ்­வாறு படங்களையும் நாடகத் தொடர்­க­ளையும் பார்க்­காது வரும் 10ம் தேதி அனை­வரும் வாக்­க­ளிக்கச் செல்­ல­ வேண்டும். படத்தில் வரும் இந்­திய நடிகர்களான விஜய்யோ, அல்­லது சூரி­யாவோ, ஆரியாவோ தமிழர்களுக்கு பிரச்னை வரும்­போது வரப்­போ­வ­தில்லை. ஆனால் மனோ கணேசன் மட்டுமே உங்­க­ளது வீடு­க­ளுக்கு வருவான். எனவே இதனை உணர்ந்து கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP