பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்துகிறது
 | 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்


இலங்கையின் சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், சித்திரவதைகளை இல்லாது ஒழிக்க வேண்டும் என இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையே, கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 2015 அக்டோபர் 1ம் தேதி மற்றும் 2017 மார்ச் 23 தேதி ஆகிய நாட்களில் நடைபெற்ற கூட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இலங்கை தொடர்பான ஐ.நா.வின் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சித்திரவதைகளுக்கு எதிரான இலங்கையின் பிரகடனத்தை வரவேற்கிறோம். இதனுடன் நிறுத்தாமல், எந்த ஒரு குற்றச் செயலாக இருந்தாலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்துவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசு நடைமுறையில் வைத்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது" என கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP