யாழில் பயங்கரம்... சகோதரனின் குழந்தையை கொன்ற வாலிபர்

யாழில் பயங்கரம் - மகனின் கொலை வெறித் தாக்குதலில் தாய் படுகாயம், குழந்தை பலி
 | 

யாழில் பயங்கரம்... சகோதரனின் குழந்தையை கொன்ற வாலிபர்


யாழ்ப்பாணத்தில் தாயையும் சகோதரனின் குழந்தையையும் கொடூரமாக வெட்டிய நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் பலமேஷ்வரி. இவரது மூத்த மகன் ஈஸ்வர் (33). பலமேஷ்வரி தன்னுடைய இளைய மகனின் மகள் நிக்சையாவுடன் (3) வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது, அங்கே வந்த ஈஸ்வர், பலமேஷ்வரி மற்றும் நிக்சையா மீது கோடாரியால் தாக்கினார். அதன்பிறகு ஈஸ்வர் விஷம் அருந்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. ஈஸ்வரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பலமேஷ்வரி யாழ்ப்பாணம் அரச மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP