முல்லைத்தீவில் இரு சமூகங்களிடையே பதற்றம்!

முல்லைத்தீவில் இரு சமூகங்களிடையே பதற்றம்!
 | 

முல்லைத்தீவில் இரு சமூகங்களிடையே பதற்றம்!


வடக்கு மாகாணம் முல்லைத்தீவு - நாயாரு பகுதியில் சிங்களம் மற்றும் தமிழ் மீனவர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு தமிழ் மீனவ மக்கள் வாழும் பகுதியில் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல் அநீதியானது என, அங்கு வாழும் தமிழ் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தெற்கு மீனவர்களுக்கு முல்லைத்தீவு - நாயாரு பகுதியில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நிள அளவைத் துறையினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்தனர். இதன் போது அங்கு வசித்து வரும் தமிழ் மீனவர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது நிலங்களில் சிங்கள மீனவ மக்களை குடியமர்த்த கூடாதென வலியுறுத்தினர். இதையடுத்து இரு தரப்பு மீனவர்களிடையேயும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 

பின்னர், நிலம் அளவிடும் நடவடிகைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இலங்கை அரசு ராணுவ உதவியுடன் தமிழ் மக்களின் பிரதேசங்களில் அவர்களின் நிலங்களை அபகரித்து சிங்கள மக்களை குடியேற்றி வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே தமிழ் மீனவர்கள் தொழில் செய்து வரும் முல்லைத்தீவு - நாயாரு பகுதியில் சிங்கள மீனவர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP