இலங்கை மற்றும் இந்தியா இடையே தொழில்நுட்ப வளர்ச்சித் திட்ட ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் இந்தியா இடையே தொழில்நுட்ப வளர்ச்சித் திட்ட ஒப்பந்தம்!
 | 

இலங்கை மற்றும் இந்தியா இடையே தொழில்நுட்ப வளர்ச்சித் திட்ட ஒப்பந்தம்!


இலங்கை மற்றும் இந்தியா இடையே சமூக வளர்ச்சித்திட்டங்களுக்கான தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார். இதன் போது இரு நாடுகளுக்கிடையில் சமூக வளர்ச்சித்திட்டங்களுக்கான தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.


இதையடுத்து கொழும்பு சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான லக்சுமன் கதிர்காமர் நினைவு இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இலங்கை மக்­களின் எதிர்­காலம், வளர்ச்சி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றின் உண்­மை­யான நண்பனாக இந்­தி­யா­ தொடர்ந்து செயற்­படும் என தெரிவித்துள்ளார்.

அவர் அந்நிகழ்வில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்­கையின் மறைந்த முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் சிறந்த அரச அதிகாரியாக இருந்­த­துடன் இந்­தி­யாவின் சிறந்த நண்­ப­ரா­கவும் திகழ்ந்தார். இலங்­கையும் இந்தியாவும் வர­லாறு கலா­சாரம் உள்­ளிட்டவற்றில் பல­மான நட்பை கொண்­டுள்­ளன. 

இலங்­கையில் முன்னெடுக்கப்படும் உதவி திட்­டங்­களில் செல்­வாக்கு செலுத்தும் அணு­கு­முறை இந்தியாவிடம் கிடை­யாது. மாறாக மக்­களின் விருப்­பத்­துக்கு அமை­வா­கவே இந்தியாவின் உதவிகள் அமையும் 

இந்­தியா டிஜிட்டல் இந்தியா வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. குறிப்­பாக தகவல் தொழில்நுட்ப துறையில் உலகில் முன்னணியில் இருக்கவேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. 

இலங்கையின் பல்கலைக்கழகங்களுடனும் 'டிஜிட்டல் இந்தியா' வேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இந்தியா முன் வந்துள்ளது. அதாவது இந்தியாவின் 'டிஜிட்டல் இந்தியா' வேலைத்திட்டத்தில் இலங்கைக்கு முழு உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP