தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரையில் - இலங்கை பிரதமர்

தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரையில் - இலங்கை பிரதமர்
 | 

தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரையில் - இலங்கை பிரதமர்


இலங்கையில் அனைத்து மக்­களும் எதிர்­பார்க்கும் தீர்­வு, புதிய அர­சியல் அமைப்பின் மூல­ம் பெற்­றுக்­கொ­டுக்­க முயற்சி செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய தைப்­ பொங்கல் நிகழ்வு அல­ரி­மா­ளி­கையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில், "அரசியல் கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புடன் அனைத்து மக்­களும் எதிர்­பார்க்கும் தீர்­வை புதிய அர­சியல் அமைப்பின் மூலம் பெற்றுக்கொடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றது. தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அர­சியல் தீர்வும் விரைவில் வழங்கப்படும். 

இந்த நாட்டில் மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ­வேண்டும். கடந்த மூன்று தசாப்த யுத்தத்தில் மக்கள் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்கள் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டனர். இன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்­கள் மற்றும் மலை­யக தமிழ் மக்­களின் உரிமைகளை பாதுகாத்து வருகின்றோம். மேலும் இலங்­கையில் காணப்­படும் அனைத்து மதங்களும் சம­மாக மதிக்கப்பட வேண்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP