துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது

The Tamil Youngsters who got abducted from turkey got arrested at Srilanka
 | 

துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது


இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக துருக்கி நாட்டுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பெருமளவிலான தமிழர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களினால் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். அந்த நிலை போர் முடிவுற்ற பின்பும் இலங்கையில் தொடர்கின்றது.

இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ள நிலையில், இன்று வரையில் அங்கு பயங்கரவாத சட்டம் நடைமுறையில் உள்ளது. நல்லிணக்க ஆட்சி நடப்பது போல் அரசு காட்டிக்கொண்டாலும், திடீர் சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால் தமிழர்கள் கடல் மற்றும் சட்டமுரணான விமான பயணங்களை மேற்கொண்டு வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். 

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டமுரணாக துருக்கி சென்ற இருவர் அந்நாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தவர்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து, மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இருவரையும் வரும் ஆண்டு ஜூன் 12ம் தேதி வரையில்  சிறையில் அடைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP