தமிழக மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீடிப்பு!

தமிழக மீனவர்களின் நீதிமன்றக்காவல் நீடிப்பு!
 | 

தமிழக மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீடிப்பு!


இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த குற்றசாட்டில், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் நீதிமன்றக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் புதுக்கோட்டை, காரைக்கால் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 54 மீனவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், 54 மீனவர்களின் நீதிமன்றக்காவலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 54 மீனவர்களும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டனர்.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருந்த 60க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP