ஸ்விஸ்- அடைக்கலம் கேட்பவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் கோருவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
 | 

ஸ்விஸ்- அடைக்கலம் கேட்பவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி!


கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து 840 பேரே ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ளனர் என ஸ்விஸ் அரச குடிவரவுச் செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 38.8 சதவிதம் குறைவு.

2017ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் தேடி செல்வோரின் எண்ணிக்கை 33.5 சதவிதமாக குறைந்துள்ளது என ஸ்விஸ் அரச குடிவரவுச் செயலகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த விண்ணப்பங்கள் கடந்த 2017ம் ஆண்டிலேயே கிடைத்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எரித்ரியாவைச் சேர்ந்த 3,375 ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ளனர். எனினும், இது முன்னைய ஆண்டை விட 35 சத வீதம் குறைவு. சிரியாவில் இருந்து 1,951 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது 9 சதவிதம் குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,217 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர். இது 62 சதவிதம் குறைவு. அதேநேரத்தில், துருக்கியில் இருந்து 852 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 62 சதவிதம் அதிகம் என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP