இலங்கை திருச்சபைகளில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து !

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கும் அபாயம் காரணமாக அங்குள்ள அனைத்து திருச்சபைகளிலும் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
 | 

இலங்கையில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில், 3 தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 253 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  எனினும், மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறுதோறும் நடைபெறும் வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மேலும், மறுஉத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என கார்டினல் ரஞ்சித் உத்தரவிட்டுள்ளதாக பேராயர் இல்ல செய்தித்தொடர்பாளர் எட்மண்ட் திலகரத்னே தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP