12 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத மாணவர் படுகொலை!

சர்வதேச பொது மன்னிப்பு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில், 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
 | 

12 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத மாணவர் படுகொலை!


இலங்கையின் திருகோணமலை கடற்கரையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

2006ம் ஆண்டு ஜனவரி இதே நாள், திருகோணமலை கடற்கரையில் வைத்து 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதலில் மர்ம நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் மற்றும் ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிதரின் தந்தை, மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சாட்சியமளித்திருந்தார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக 2013ம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படை வீரர்கள் 11 பேரும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 12 பேர் கைதுசெய்யப்பட்டனர்.  

இதேவேளை இந்த மாணவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டே கொல்லப்பட்டார்கள் என்பதை, தமது புகைப்படத்தின் மூலம் பத்திரிகை ஒன்றில் வெளியிட்ட பத்திரிகையாளர் சுப்பிரமணியன் சுகிர்தராஜனும் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச பொது மன்னிப்பு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில், 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP