Logo

முல்லைத்தீவில் 308 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவில் 308 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்!
 | 

முல்லைத்தீவில் 308 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்!


இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போராட்டம், இன்றும் தொடர்ந்து வருகிறது.

இறுதிப் போர் நடைபெற்ற 2009ம் ஆண்டு, சரணடைந்த அல்லது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலையும் இலங்கை அரசாங்கம் அவர்களின் உறவினர்களுக்கு கூறவில்லை.

இந்நிலையில், தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை மீட்டு தருமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடுப்பங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்து வரும் போராட்டம் 308 நாட்களை எட்டியுள்ளது.

ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், போராட்டம் நடைபெறும் இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும்  இரு முறை சந்தித்துள்ளார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இன்று வரையில் எடுக்கப்படவில்லை. 

இந்த நிலையில், "தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடோம்" என போராட்டம் நடத்தி வரும் உறவுகள் அறிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP