இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து சமூக வலைதளங்களை முடக்க இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது.
 | 

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தையடுத்து சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து இலங்கை சற்று மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் சிலோபம் என்ற கடலோர பகுதியில் கலவரம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான பதிவால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதையடுத்து அப்பகுதியில் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள சேவைகளை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP