இலங்கையின் விமான சேவை நிறுவனங்கள் மீது விசாரணை!

இலங்கையின் விமான சேவை நிறுவனங்கள் மீது விசாரணை!
 | 

இலங்கையின் விமான சேவை நிறுவனங்கள் மீது விசாரணை!


இலங்கையின் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுவனங்களில் நிதி மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 6 அதிகாரிகள் கடந்த ஆண்டு திடீரென தமது பதவிகளை ராஜினாமா செய்தனர். 

இந்நிலையில், தம்புள்ளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, “மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் அமைக்கப்படும். விமான சேவையின் மூலம் பொதுமக்களின் பணம் பெரும் அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய வங்கியின் நிதி மோசடி குறித்து ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், விமான நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP