Logo

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப அழைப்பு

இலங்கைப் போரின் போது அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப அழைப்பு

இலங்கைப் போரின் போது அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும், என இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வந்த போர், கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போரின்போது, இலங்கை தமிழர்கள் அங்கிருந்து தப்பி, பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர். முக்கியமாக, இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மறுசீரமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ, அனைத்து இலங்கை தமிழ் அகதிகளும் நாடு திரும்ப வேண்டும், என அழைப்பு விடுத்தார். "இதுவரை 5000க்கும் மேற்பட்ட அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும்" என்றார்.

இந்தியாவிலுள்ள அகதிகளில் 20 முதல் 30 சதவீதம் பேர், இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை சந்திக்க விரைவில் தென்னிந்தியாவுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார். தங்குவதற்கு வீடு, பாதுகாப்பான வாழ்க்கை, குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்துகொடுக்க இலங்கை அரசு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP