விடுதலை புலிகள் வர வேண்டும் என்ற இலங்கை அமைச்சர் ராஜினாமா

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் விஜயகலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 | 

விடுதலை புலிகள் வர வேண்டும் என்ற இலங்கை அமைச்சர் ராஜினாமா

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் விஜயகலா தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் வியகலா மகேஸ்வரன். இவர், இலங்கையின் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்துவந்தார். கடந்த 2ம் தேதி, யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஈழ மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சிங்கள கட்சிகள் மட்டுமின்றி, அவர் கட்சியில் இருந்து கூட கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்தநிலையில், விஜயகலா பேசியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. விசாரணை முடியும் வரை விஜயகலாவை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யும்படி ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில், விஜயகலா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். குறித்து விஜயகலா மகேஸ்வரன் கூறுகையில், ''விசாரணைக்கு ஒத்துழைக்கவே அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன். என்ன பதவி விலக யாரும் நிர்பந்திக்கவில்லை'' என்றார். 

விஜயகலா மகேஸ்வரன், தன் ராஜினாமா கடிதத்தை, அதிபர், பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார். விஜயகலாவின் கணவர் மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர். எம்.பி., மற்றும் அமைச்சராக பதவி வகித்த அவர் 2008ல், கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார். விஜயகலா பேசியதற்கு தமிழர்கள் மத்தியில் வரவேற்று அதிகமாக உள்ளது. இலங்கையின் பேசும் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜயகலாவுக்கு ஆதரவாக வைகோ உள்ளிட்டவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP