புத்தர் கோவில்களை தகர்க்க திட்டம்- இலங்கை உளவுத்துறை எச்சரிக்கை

புத்தர் கோவில்களை குறி வைத்து பெண் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இலங்கை உளவுத்துறை எச்சரிக்கை விடுதுள்ளது.
 | 

புத்தர் கோவில்களை தகர்க்க திட்டம்-  இலங்கை உளவுத்துறை எச்சரிக்கை

புத்தர் கோவில்களை குறி வைத்து பெண் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இலங்கை உளவுத்துறை எச்சரிக்கை விடுதுள்ளது.

கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினமான அன்று இலங்கையில் உள்ள கொழும்பு உள்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்ரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள புத்தர் கோவில்களில் பெண் பயங்ரவாதிகள் மாறு வேடத்தில் வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்று இலங்கை உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக  இலங்கை உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சாய்ந்தமருது என்ற இடத்தில் ராணுவத்தினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

இதில் 4 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அந்த வீட்டில் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள், வெள்ளை நிற ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி கிரியுல்லா என்ற பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் இஸ்லாமிய பெண் ஒருவர் 29 ஆயிரம் மதிப்பிலான இலங்கை ரூபாயில் வெள்ளை நிற ஆடைகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பெண் கடைக்கு வந்து ஆடைகள் வாங்கி செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை வைத்து அந்த பெண்ணை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மேலும் புத்தர் கோவிலுக்கு பெண் பயங்ரவாதிகள் பக்தர்கள் போர்வையில், வெள்ளை நிற ஆடைகளில் ஊடுருவி தாக்குதல்கள் நடத்தக்கூடும் என இலங்கை உளவுத்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP