இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த, தற்கொலைப் படை தீவிரவாதிகள் 9 பேரில், இருவர் இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரத் தொழிலதிபரின் மகன்கள் என தெரியவந்துள்ளது.
 | 

இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் 9 பேரில், இருவர் இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரத் தொழிலதிபரின் மகன்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மசாலா பொருள் வர்த்தகரான, முகமது யூசுஃப் இப்ராகிம் என்பவர், பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவர்.  ஜனதா விமுக்திப் பெரமுனா கட்சியின் முக்கிய பிரமுகராகவும் உள்ளார்.

இவரது மகன்களான இம்சாத் அகமது இப்ராகிம், இல்ஹாம் அகமது இப்ராகிம் ஆகியோருக்கு, சில மாதங்களுக்கு  முன்பு இலங்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தினரோடும், பின்னர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடனும் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்ட போது, மனித வெடிகுண்டுகளாக செயல்பட இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சின்னமான் கிராண்ட் மற்றும் சாங்ரி-லா நட்சத்திர விடுதிகளுக்குள், சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் செல்ல, பணக்கார குடும்பத்துப் பின்னணியை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், அங்கு தங்கி தற்கொலைப் படைத்தாக்குதலை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 

மேலும், தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட, 9 போில் ஒருவர் பெண் என்பதும் தெரிய வந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP