'இதே நிலை நீடித்தால் ரத்த ஆறு ஓடும்' - இலங்கை சபாநாயகர் எச்சரிக்கை!

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்தை நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து தீர்க்காமல், பிரச்னை வீதிகளுக்கு சென்றால், ரத்த ஆறு ஓடும், என இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரியா எச்சரித்துள்ளார்.
 | 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சேவை இலங்கையின் பிரதமராக அதிரடியாக நியமித்தார் அந்நாட்டின் அதிபர் சிறிசேன. இது அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ராஜபக்சேவின் நியமனம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்தார். இலங்கையின் பிரதமர் தான்தான் என ராஜபக்சேவும், ரணிலும் கோரிவருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய இலங்கை சபாநாயகர் ஜெயசூரியா, "இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் வைத்தே தீர்த்துக் கொள்ள வேண்டும். வீதிகளுக்கு இது சென்றால், ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும்" என்றார்.

ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும், என எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமரை மாற்றிய, சிறிசேன, தனது முடிவுக்கு தடை ஏற்படக் கூடாது என்பதற்காக, நாடாளுமன்றத்தை நவம்பர் 16ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

"தற்போது அதிகாரத்தில் ஒரு இடைவேளை விழுந்துள்ளது. யாருமே நாட்டிற்கு தலைமை ஏற்கவில்லை. அதனால் தான் நாடாளுமன்றத்தை உடனே அழைத்து, யாருக்கு பெரும்பான்மை உள்ளது என கண்டறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெரும்பான்மை உள்ள நான் தான் பிரதமர்" என்றார் ரணில் விக்ரமசிங்கே.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP