இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் !

கொழும்புவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 இந்தியர்கள் உள்பட 35 பேர் வெளிநாட்டினரும் உள்ளதாக தெரிகிறது. மேலும் சுமார் 450 படுகாயம் அடைந்துள்ளனர்.
 | 

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 4 நடசத்திர விடுதிகள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரில் 5 இந்தியர்கள் உட்பட 35 வெளிநாட்டினர் என தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் !

மேலும் அசம்பாவிதங்கள் நிகழாதவண்ணம் நாடு முழுவதும் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஜப்பான், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, அமெரிக்கா, டென்மார்க், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாகவும் அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு ஜப்பானியர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையில், நான்கு ஜப்பானியர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், அனுமந்த்ராயப்பா, ரங்கப்பா ஆகிய 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும், தேவைப்பட்டால் இந்தியாவில் இருந்து மருத்துவர் குழுவை அனுப்பி வைக்க இந்தியா தயாராக உள்ளதாகவும் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP