இலங்கை: 8 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட சாலை!

8 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட வற்றாப்பளைக்கான வீதி!
 | 

இலங்கை: 8 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட சாலை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்திற்கான வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு வீதி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 

2009ம் ஆண்டு நடுப்பகுதியில் வடக்கு கிழக்கு இலங்கை ராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் போது விடுதலைப்புலிகளின் முக்கிய முகாம்கள் அமைந்த பகுதிகள் என ராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட பல இடங்கள் அவர்களின் பலத்த பாதுகாப்பின் கீழ் உள்ளது. அதில் ஒன்றாக முல்லைத்தீவில் அமைந்துள்ள கேப்பாப்புலவு கிராமமும் இருந்து வருகின்றது. இந்த பகுதியில் இன்னமும் மக்கள் முழுமையாகக் குடியேற்றப்படவில்லை. 

கேப்பாப்புலவில் இருந்து வற்றாப்பளைப் பிரதேசத்துக்கு செல்லும் முக்கிய வீதி கடந்த 8 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தது. இந்த வீதியைத் திறக்குமாறு மக்கள் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர். மக்கள் நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையையடுத்து வற்றாப்பளை - புதுக்குடியிருப்பு வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று. அங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது கடல் நீரில் அம்மனுக்கு விளக்கேற்றப்படும் இது அக்கோவிலின் புனித நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP