இலங்கை: வடக்கு மாகான முதலவர் விக்னேஸ்வரன் புதிய அணி தொடங்கினார் 

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்த விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்தும விலகி அதற்கு போட்டியாக தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அணியை தொடங்கியுள்ளார்.
 | 

இலங்கை: வடக்கு மாகான முதலவர் விக்னேஸ்வரன் புதிய அணி தொடங்கினார் 

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்த விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்தும விலகி அதற்கு போட்டியாக தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அணியை தொடங்கியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் பரவாலாக வாழும் வடக்கு மாகாண கவுன்சிலின் பதவிக்காலம் நேற்றோது முடிவடைந்தது. இதனால் தனது முதல்வர் பதவியை வடக்கு மாகாண முதல்வராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன் இன்று முறைப்படி ராஜினாமா செய்தார். ஆதனைத் தொடர்ந்து வடக்கு மாகான நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்ற அவர், அங்கு தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அங்கு அவர் பேசுகையில், ''இலங்கையில் 2015ஆம் ஆண்டு புதிய அரசு பதவியேற்றது. அந்த அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் முந்தைய அரசுக்கும் இந்த அரசுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. 

வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டது. சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்னமும் அங்கு  60 தமிழர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். 

தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட தமிழர் நிலமாக விளங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனால் தமிழ் தேசியக் கூட்டணி அதில் தவறி விட்டது. அதனால் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து நான் விலகுகிறேன். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அணி உருவாகிறது. தமிழ் மக்கள் கூட்டணியில் தமிழர் சார்ந்த கட்சிகள் மட்டுமே இடம்பெரும்'' எனக் கூறினார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP