Logo

சர்வதேச நாடுகளின் நெருக்கடியில் இலங்கை!

சர்வதேசத்தின் நெருக்கடியில் இலங்கை!
 | 

சர்வதேச நாடுகளின் நெருக்கடியில் இலங்கை!


இலங்கை மத்திய வங்கி நிதி மோசடி விவகாரத்தால் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் கவலையடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் மத்திய வங்கியில் கடந்த 2015, 16ம் ஆண்டுகளில் பெருமளவில் நிதி மோசடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்  வெளிநாடுகளிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதில், இலங்கை அரசாங்கத்திற்கு  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

மேலும் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலம்  தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி  கூறியுள்ளதை உதவி வழங்கும் நாடுகள் வரவேற்றுள்ளன.  

எதிர்காலத்தில் இவ்வாறான நிதி மோசடிகள் தொடருமானால் நிதியுதவிகளை எதிர்பார்க்க முடியாது என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே காலம் கடத்தாது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  மோசடி செய்யப்பட்ட நிதி பறிமுதல் செய்யப்பட வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP