சர்வதேச நீதிபதிகள் மீது இலங்கைக்கு நம்பிக்கையில்லை: அமைச்சர்

சர்வதேச நீதிபதிகள் மீது இலங்கைக்கு நம்பிக்கையில்லை! அமைச்சர் மஹிந்த சமரசிங்க
 | 

சர்வதேச நீதிபதிகள் மீது இலங்கைக்கு நம்பிக்கையில்லை: அமைச்சர்


இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து உண்மைகளை கண்டறியும் விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. மேலும் போரில் பாதிக்கப்பட்டு இருந்த மக்கள் மீது மிக மோசமான மனித உரிமை மீறல்களை நடத்தியது. இந்த விவகாரத்தில் ஐநா பையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த விசாரணையை உள்நாட்டிலேயே நடத்த வேண்டும் என்றும் வெளிநாட்டவர்கள் விசாரணைகளில் ஈடுபட முடியாதென்றும் இலங்கை தொடர்ச்சியாக கூறி வருகின்றது.

இந்நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, "சர்வதேச நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர். இது இலங்கைக்கு சாதகமாக அமையாது.

மேலும் வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.  இலங்கை சார்பில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்பதை தெரிவிக்க உள்ளோம். தற்போது இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே இவை அனைத்துமே இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP