சிறீசேனா ஜம்பம் நாட்டுக்கு கேடு...!

முடிந்து விட்ட பிரச்னையை மீண்டும் தொடங்காமல் இருக்க வேண்டும் என்றால் சீறீசேனா மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க வேணடும் அதற்கு பதிலாக வேறுயாரையாவது நியமனம் செய்தால் இந்த பிரச்னை தொடரத்தான் செய்யும்.
 | 

சிறீசேனா ஜம்பம் நாட்டுக்கு கேடு...!

ராஜபக்சே உடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் மைத்திரிபால சிறிசேனே அவருக்கு எதிரான நிலைப்பாடு உள்ள ரனில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 

பின்னர் சிறிசேனா அதிபராகவும், ரணில்விக்ரமசிங்கே பிரமராகவும் இலங்கையை ஆட்சி செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சே கணிசமான வெற்றி பெற்றதும், நிலை மாறியது. அதுவரை இணைந்து பணியாற்றிய  அதிபர் சிறீசேனா, விக்ரமசிங்கே இடையே முட்டல் மோதல் ஏற்பட்டது. இதன் உச்சமாக சிறீசேனா கடந்த அக்டோபர் மாதம்  25ம் தேதி ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து  நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.  அந்தநேரத்திலேயே ராஜபக்சேவிற்கு ஆதரவு இல்லை. அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது, இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு யாரும் துணை நிற்கமாட்டார்கள் என சிறீசேனா, ராஜபக்சே இருவருக்கும் நன்கு தெரியும். இருந்தும் கூட சிறீசேனாவின் ஜம்பத்திற்கு இந்த நடவடிக்கை. 

ஆனால் ஜனநாயக அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஏற்காத சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை நீக்கவிட்டு போட்டி சபாநாயகர் நியமனம், மேலும் நாடாளுமன்றத்தை கலைப்பு ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை ஏற்காத தன்மை என அடுத்த அடுத்து சீறிசேனா ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இந்த சம்பவங்களை வரிகளுக்குள் அடுக்கினாலும், அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் அனுபவதித்தவர்களுக்கு தான் தெரியும். இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய அரசியல் நாடகம் சுபமாக முடிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இலங்கை உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தான். 

உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொண்டதால் தான் ராஜபக்சே இந்த முடிவுக்கு தள்ளப்பட்டார். தேர்தலில் வெற்றி பெறாமல் பிரதமராக செயல்படவிரும்பவில்லை என தற்போது கூறும் அவர் தொடக்கத்திலேயே இந்த முடிவை எடுத்திருந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருந்து இருக்கும்.
 
அதே நேரத்தில் முடிந்து விட்ட பிரச்னையை மீண்டும் தொடங்காமல் இருக்க வேண்டும் என்றால் சீறீசேனா மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க வேணடும் அதற்கு பதிலாக வேறுயாரையாவது நியமனம் செய்தால் இந்த பிரச்னை தொடரத்தான் செய்யும். அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் சிறீசேனா இனி அரசியலில் முன்வரிசைக்கே வர முடியாது. இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP