Logo

ராஜபக்சவுக்கு நீதிமன்றம் வைத்த செக்... அதிர்ச்சியில் சிறிசேனா!

இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் பிரளயத்தின் அடுத்த கட்டமாக, பிரதமர் ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவை செயல்பட இடைக்கால தடை விதித்து அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ராஜபக்சவுக்கு நீதிமன்றம் வைத்த செக்... அதிர்ச்சியில் சிறிசேனா!

இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் பிரளயத்தின் அடுத்த கட்டமாக, பிரதமர் ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவை செயல்பட இடைக்கால தடை விதித்து அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்து உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் சிறிசேனா. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ராஜபக்சவின் ஆட்சியை பாதுகாக்க, நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கியும் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால், அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின், நாடாளுமன்றம் ஒன்று கூடி, பிரதமர் ராஜபக்ச அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், இதை ஏற்க அந்நாட்டு அதிபர் சிறிசேன மறுத்துவிட்டார். 

இந்நிலையில், இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் மனு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில், ராஜபக்ச அரசுக்கு பெரும்பான்மை இல்லயென்பதால் அதை கலைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ராஜபக்ச அரசின் மீது இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது. வரும் 12ம் தேதிக்கு வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாகவும், அதுவரை ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை செயல்பட தடை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

"சரியான முறைப்படி பதவிக்கு வராதவர்கள் ஆட்சி செய்தால், நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்படும்", என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP