மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு... கதிர்காமத்தில் பதற்றம்

இளைஞன் சுட்டுக் கொலை- போலீஸார் மீது தாக்குதல்! - கதிர்காமத்தில் பதற்றம்
 | 

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு... கதிர்காமத்தில் பதற்றம்


இலங்கை கதிர்காமத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு கூடிய மக்கள் போலீஸாரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கதிர்காமம் நகருக்கு அருகில், இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவரை நிறுத்தும்படி போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளார். இதனால், அந்த இளைஞர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்படுகாயம் அடைந்த அந்த இளைஞர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் கான்ஸ்டபிள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும், மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். இதில், இரு மாணவர்களும் பலியாகினர்  என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP