தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் சர்ச் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பையடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 | 

தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் சர்ச் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பையடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஈஸ்டர் பண்கையையொட்டி, இன்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி என்பன அந்த 6 இடங்களாகும். 

குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், தொடர்ந்து கொழும்பு தெகிவாலா(Dehiwala) என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்கா அருகே உள்ள ஹோட்டலில் 7வது முறையாக குண்டு வெடித்துள்ளது.  தொடர் குண்டுவெடிப்பையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. வழிபாட்டு தலங்கள், மத தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP