சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- இலங்கை

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- இலங்கை
 | 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- இலங்கை


சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பாக இலங்கைக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு பிரிட்டன் சுற்றுலாப் பயணியைக் கொன்றுவிட்டு, அவரது தோழியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மகிந்த ராஜபக்சே அரசில் முக்கிய பதவியில் இருந்த சம்பத் புஷ்பா விதனபதிரன உள்ளிட்ட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு இலங்கைக்கு கல்விச்சுற்றுலா வந்த ஆஸ்திரேலிய மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அதே போல், கடந்த செப்டம்பர் மாதம், திருகோணமலையில் சுற்றுலா பயணி ஒருவர் மீது பாலியல் முயற்சியில் ஈடுபட்ட குற்றசாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டுகளினால் இலங்கை சுற்றுலாத்துறையின் மீது பல்வேறு விமர்சனங்கள் உலக அளவில் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீஸ் பிரிவுக்கு மோட்டார் சைக்கில் பிச் ரோவர் என்ற வாகனங்களை அமைச்சர் சாகல ரத்னாயக்க வழங்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் சிகிரியா, அறுகம்பே, அனுராதபுரம், நீர்கொழும்பு மொனராகலை, பாசிக்குடா பொலன்னறுவை, கண்டி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளைச் சேர்ந்த போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய அமைச்சர் சாகல ரத்னாயக்க, "சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் சுற்றுலாவை மேற்கொள்ளும் போது அந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்துவர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP