இலங்கை தேயிலை மீதான தடையை நீக்கியது ரஷ்யா

30ஆம் தேதி முதல் இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 | 

இலங்கை தேயிலை மீதான தடையை நீக்கியது ரஷ்யா


இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்த இடைகாலத் தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட தேயிலையில் வண்டுகள் இருந்ததாக கூறி இலங்கை தேயிலைக்கு அந்நாடு தடை விதித்திருந்தது. இதனால், இலங்கையில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதினார் இலங்கை ஜனாதிபதி. ஆனால், தடையை நீக்க ரஷ்யா மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, தேயிலைக்கான தடையை நீக்குவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு எடுத்து.


ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி தலைவர் ரோஹன் பெட்டியகொட, ரஷ்யாவுக்கான இலங்கை தூதர் எச்.ஈ.சமன்வீரசிங்க தலைமையிலான குழுவினர், ரஷ்யாவின் கால்நடை மற்றும் பூச்சிதொற்று கண்காணிப்பு அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வருகிற 30-ம் தேதி முதல் இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி தேயிலையில், கெப்ரா எனப்படும் வண்டு வகை ஒன்று காணப்பட்டதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை தேயிலைக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் கெப்ரா வகை வண்டு இல்லை... கப்பல் பயணத்தில் வண்டு வந்திருக்கலாம் என்பதை ரஷ்யா அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதையடுத்து தேயிலைக்கான தடையை நீக்க ரஷ்யா முன் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP