இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை; பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு

தேயிலைக்கு ரஷ்யாவின் தடையை நீக்குவதற்காக இலங்கைக்குழு ரஷ்யாவுக்கு பயணம்
 | 

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை; பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு


இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்க கோரும் பேச்சுவார்த்தை அந்நாட்டில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இலங்கை தேயிலைப்பொதிகளில் வண்டுகள் இருந்ததாக கூறி கூறி இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதையடுத்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ரஷ்ய அதிபருக்கு தேயிலைக்கான தடையை நீக்க கோரி கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் இன்னும் தடை நீக்கப்படவில்லை.

இதனால் இந்த விவகாரத்தில் அந்நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேயிலைக்கான தடையை நீக்க, தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று நாளை ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர்.

இதுதொடர்பாக தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க பேசியபோது, தேயிலை ஏற்றுமதித் தடையை நீக்குவதற்காக பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை ரஷ்யா வழங்கியுள்ளமை தடையை நீக்குவதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்றார்.

இலங்கை வருடாந்தம் 30 கோடி கிலோ கிறாம் தேயிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் 11 சதவீதம் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதேவேளை இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், வரும் 15ம் தேதி அளவில் இந்த தடையை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP