எந்த ஒரு சவாலையும் சந்திக்கத் தயார்! இலங்கை ஜனாதிபதி

எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார்! இலங்கை ஜனாதிபதி
 | 

எந்த ஒரு சவாலையும் சந்திக்கத் தயார்! இலங்கை ஜனாதிபதி


எத்தகைய சவால்கள் வந்தாலும் தூய அரசியல் இயக்கத்திற்கான தனது பணியை கைவிடப் போவதில்லை என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சிறிசேன பேசியதாவது:

"சிறந்த அரசியல் கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது இன்று தேசத்தின் தேவையாக உள்ளது. இன்று நாடு முழுவதும் பேசுகின்ற பிணைமுறி ஊழல் குறித்த ஆணைக்குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதும், லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் எயார் விமான சேவை குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூய அரசியல் இயக்கமாக பலப்படுத்த வேண்டியது அவசியம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தாது நாட்டை நேசிக்கும் அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப முடியாது. 

மேலும் அதிகார பலத்தினால், பணப் பலத்தினால் அல்லது பதவிப் பலத்தினால் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற முடியாது. புதிய தேர்தல் முறைமைக்கு ஏற்ப இது அறிவுபூர்வமாக வெற்றிக்கொள்ள வேண்டிய தேர்தல். நாட்டை நேசிக்கும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP