எந்த விசாரணைக்கும் தயார் : முன்னாள் மத்திய வங்கிஆளுநர்

எந்த விசாரணைக்கும் தயார் : முன்னாள் மத்திய வங்கிஆளுநர்
 | 

எந்த விசாரணைக்கும் தயார் : முன்னாள் மத்திய வங்கிஆளுநர்


2008 - 2014 காலப்பகுதியில் மத்திய வங்கியில் நிதிமோசடி உள்பட எந்தவிதமான மோசடிகளும்நடைபெறவில்லை என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் தான் ஆளுநராக இருந்தபோது நடைபெற்ற எந்த சம்பவம் குறித்தும் தன்னிடம் விசாரிக்கலாம் என்ற கூறியுள்ள அவர், “மத்திய வங்கியில் நடைபெற்ற பத்திர ஊழலில் தொடர்புடையதாக நிரூபிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்கட்டும்” என சவால் விடுத்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறானக் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றொரு முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான அர்ஜூன் மகேந்திரன், பத்திர ஊழல் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் அஜித் நிவாட் கப்ராலின் கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. அத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜூன் மகேந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக முன்னர் பேசியிருந்த ஜனாதிபதி சிறிசேனா, “அரசுக்கு ஏற்பட்ட 11,145 மில்லியன் ரூபாய்(இலங்கை மதிப்பு) இழப்ப மீட்க எந்தவித தயக்குமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP