மீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது

இலங்கை பிரதமராக இன்று 5வது முறையாக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்க. நேற்று ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 | 

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கினார் அதிபர் சிறீசேனா. அதைத்தொடர்ந்து ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை அதிபர் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் நடவடிக்கைக்கு இலங்கை உச்சநீதிமன்றம் முதலில் இடைக்கால தடை விதித்தது. பின்னர் அதிபரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கிடையே, புதிய பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ராஜபக்சே பதவி விலகவுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் நேற்று பதவி விலகினார். இந்நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் 5வது முறையாக பிரதமராகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP