பிரகீத் வீடு திரும்பவில்லை- வித்தியாசமான போராட்டத்தில் குதித்த சந்தியா!

பிரகீத் வீடு திரும்பவில்லை- வித்தியாசமான போராட்டத்தில் குதித்த சந்தியா!
 | 

பிரகீத் வீடு திரும்பவில்லை-   வித்தியாசமான போராட்டத்தில் குதித்த சந்தியா!


இலங்கையின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவி தலைநகர் கொழும்பில் வித்தியாசமான போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் இருந்த போது, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டார்.  இதைத் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் பிரகீத்தின் மனைவி சந்தியா.

இந்நிலையில், கண்ணகி மற்றும் காளி தெய்வங்களின் படங்களை வைத்து பூஜை செய்து வித்தியாசமான முறையில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால்  குறித்த போராட்டத்தினை மிகவும் அமைதியான முறையில்  அவர் முன்னெடுத்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட  காணாமல் ஆக்கப்பட்டது குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரிடம் நீதிகேட்டு, நீதி கிடைக்காத  நிலையில்,  நீதி தேவதைகளாக வழிபடும்  கண்ணகி மற்றும் காளி தெய்வங்களின் படங்களை வைத்து அமைதியான முறையில்  போராட்டத்தை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP