பிரதமர் மாளிகை மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டம்?

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் மாளிகை அருகே, தற்கொலைப் படை தாக்குதலுக்கான அங்கிள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பிரதமர் மாளிகை மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டம்?

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அலரி மாளிகை அருகே, தற்கொலைப் படை தாக்குதலுக்கான அங்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள், இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.  இதையடுத்து அங்கு நாடு முழுவதும் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பாறை,  சம்மாந்துறை பகுதிகளில்,  வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களான டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக, ஏழு பேரை இலங்கை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அலரி மாளிகை அருகே, தற்கொலைப் படை தாக்குதலுக்கான அங்கிகளையும் போலீஸார் கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மாளிகை மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP