உண்மையான திருடர்களை மக்கள் அறிவார்கள்- இலங்கை ஜனாதிபதி

உண்மையான திருடர் என்பதை மக்கள் அறிவார்கள்.
 | 

உண்மையான திருடர்களை மக்கள் அறிவார்கள்- இலங்கை ஜனாதிபதி


நாடாளுமன்றத்தில் ஒரு­வ­ருக்கு ஒருவர் திருடர் பட்டம் சூட்­டிக்­கொண்டு மோதலில் ஈடுபட்டாலும் யார் உண்மையான திருடர் என்பதை மக்கள் அறிவார்கள் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி நிதி மோசடி குறித்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், பிரதமர் ரணில் உரையாற்றத் தொடங்கியதும் கூட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அது மோதலில் முடிந்தது. இதையடுத்து நாடாளுமன்றம் வரும் 23ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், சிறிலங்கா சுதந்­திர கட்­சியின் தலைமையி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் முதலாவது ­தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனா­தி­பதி தலை­மையில், அனு­ரா­த­புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரை­யாற்றிய ஜனாதிபதி, கூட்டு எதிர்க்கட்சியினர் மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”இந்த நாடு சிறிலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மையின் கீழேயே கட்­டி­யெ­ழுப்­ப­பட்­டுள்­ளது. இந்த வர­லாற்றை யாராலும் நிரா­க­ரிக்க முடி­யாது. கடந்த காலம் இலங்­கை வர­லாற்றில் மிகவும் கசப்­பான வர­லா­றாகும். இந்த நாடு ஊழல், குற்றம், சர்­வா­தி­கார பாதையில் பய­ணித்த நிலையில், நாம் முன்­வந்து நாட்டில் மாற்­றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.  

நாம் ஊழல் மோச­டிகள் இல்­லாத நாட்­டினை உரு­வாக்கும் போராட்­டத்தில் ஈடு­பட்டு வருகிறோம். பொது மக்­களின் சொத்­துக்­களில் எவரும் கைவைக்க முடி­யாது. தமது பைகளை நிறைத்­து­கொண்டு மக்­களை தண்­டிக்கும் எந்த செயற்­பா­டு­க­ளுக்கும் எனது கட்­சியில் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன்.

நேற்று நாடாளுமன்றம் கூடிய போது மிகவும் மோச­மான சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றது . நாம் இன்று அனு­ரா­த­பு­ரத்தில் கூடிய நிலையில், நாடாளுமன்றத்தில் இருந்த இரு பிரிவுகள் தம்மை திரு­டர்கள் என விமர்­சித்­துக்­கொள்­கின்­றனர். அவர்கள் நாடாளு­மன்­றத்தை அவ­ம­திக்கும் வகையில் செயற்­பட்­டுள்­ளனர். ஆகவே இவர்­களில் யார் திரு­டர்கள் என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். இவர்­களில் எவரும் தூய்­மை­யான அர­சி­யலை செய்­ய­வில்லை என்­பது மக்­க­ளுக்கு தெரிந்­து­விட்­டது என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP