இலங்கை நாடாளுமன்றம் வருகிற 21ம் தேதி வரை ஒத்திவைப்பு!

இன்றைய இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில், ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து, சபாநாயகர் அவையை வருகிற 21ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளார்.
 | 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததையடுத்து, நேற்று நாடாளுமன்றம் கூடியது.அதில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 

இந்த நிலையில்இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது. பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் சபாநாயகர் கரு ஜெயசூரியா தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சபாநாயகர் வெளியேறினார். 

இதையடுத்து நாடாளுமன்ற அவை வருகிற 21ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP