Logo

சிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட அதிபர் சிறிசேனாவை எதிர்த்து, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
 | 

சிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட அதிபர் சிறிசேனாவை எதிர்த்து, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இலங்கை அதிபர் சிறிசேனா, கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராகவும் நியமித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்தி, நாடாளுமன்றத்தையே கலைத்தார் சிறிசேனா. புதிய தேர்தலையும் அறிவித்தார். 

அதிபரின் இந்த முடிவு, செல்லுமா என உச்ச நீதிமன்றத்தை நாடியது இலங்கை தேர்தல் கமிஷன். அதேநேரம், நீக்கப்பட்ட பிரதமர் அரணில் விக்ரமசிங்கேவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் தற்போது ஒன்று சேர்ந்து அதிபரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. 

எல்லா மனுக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும், வழக்கை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP