ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்துள்ளார்.
 | 

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனான கருத்து முரண்பாடு காரணமாக, அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. பின்னர் ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாகவும், ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டதாலும், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் ]அறிவித்தார். 

அதிபரின் இந்த தன்னிச்சையான முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இலங்கை எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில், அதிபரின் நடவடிக்கைகள் மீது இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கும், தேர்தல் நடத்தவும் இடைகாலத்தடை விதிக்கப்பட்டது. 

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட இருப்பதாக சபாநாயர்க கரு ஜெயசூரியா நேற்று அறிவித்தார்.அதன்படி இன்று நாடாளுமன்றம் கூடியது. ரணில் விக்ரம்சிங்கே கட்சி உறுப்பினர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை எதிர்த்து ராஜபக்சே அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக ரணில் தரப்பு சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், அவர் பிரதமர் பதவிக்கு தகுதி இழந்ததாகவும் அவர் அறிவித்துள்ளார். 

இதனால் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றபோது வேறொரு சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இலங்கை அரசியலில் தொடர்ந்து ஒரு குழப்பம் நீடித்து வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP