ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்; அவையில் கூச்சல், குழப்பம்

இன்றைய இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 | 

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனான கருத்து முரண்பாடு காரணமாக, அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. பின்னர் அதிபரின் இந்த செயலுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றதாலும், ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டதாலும் நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தல்களை நடத்த அதிபர் உத்தரவிட்டார். 

அதிபரின் இந்த தன்னிச்சையான முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இலங்கை எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் மீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அதிபரின் நடவடிக்கைகள் மீது இடைக்கால தடை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. 

ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்; அவையில் கூச்சல், குழப்பம்

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட இருப்பதாக சபாநாயர்க கரு ஜெயசூரியா அறிவித்தார்.அதன்படி இன்று நாடாளுமன்றம் கூடியது.  ரணில் விக்ரம்சிங்கே கட்சி உறுப்பினர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை எதிர்த்து ராஜபக்சே அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நாடாளுமன்றம் நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். 

தற்போதைய சூழலில், இலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதால், ராஜபக்சே அணியினர் ரணில் அணிக்கு தாவுகின்ன்றனர். இதனால், ராஜபக்சே உறுதியாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை திசைதிருப்பவே ராஜபக்சே அவை வெளிநடப்பு செய்து கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP