மாறுகிறது இலங்கையின் வரைபடம்!

இலங்கையின் புதிய வரைபடம் 1:50 000 விகிதம் வரைபடமாக அமைந்துள்ளது. இதில் 92 விகித பணிகள் நிறைவு
 | 

மாறுகிறது இலங்கையின் வரைபடம்!


இலங்கையில் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நில அளவைத்துறை தலைவர் பி.எம்.பி உதயகாந்த தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளில் இலங்கையில் புவியில் ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் இலங்கையில் பல வளர்ச்சித்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் கடலுக்குள் கொழும்பு துறைமுக நகரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உதயகாந்த, "இந்த புதிய வரை படத்தில் இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு கரையோர பகுதியின் அளவு நீண்டிருப்பதை காண முடியும். அதே வேளை சிலாபக் கரையோரப் பகுதி குறைவடைந்துள்ளது. இலங்கையின் புதிய வரைபடம் செயற்கைக்கோள் தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றது. அதன் பணிகள் முடிந்தவுடன் புதிய வரைபடத்தை நில அளவையாளர் சபையின் இணையதளத்தில் பார்வையிடலாம்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP