விமான சேவையின் மூலம் பொதுமக்களின் பெருமளவு நிதி மோசடி-மைத்திரிபால சிறிசேன

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
 | 

விமான சேவையின் மூலம் பொதுமக்களின் பெருமளவு நிதி மோசடி-மைத்திரிபால சிறிசேன


விமான சேவையின் மூலம் பொதுமக்களின் பெருமளவு நிதி, மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் கடமையாற்றிய பணிப்பாளர் சபையிலுள்ள 6 அதிகாரிகள் திடீரென தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த ராஜினாமாவையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் புதுப்பிக்கப்பட வேண்டுமாயின், அந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பழைய உறுப்பினர்கள் விலக வேண்டும் என அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சமயத்தில், கடுவெல வாராந்த சந்தைத் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை வரும் ஜனவரி மாதம் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் விமான சேவைகள் மூலம் பொதுமக்களின் பெருமளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP