இலங்கையில் தேயிலை, மிளகு ஏற்றுமதிக்கு தடை - மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு

வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குப் பின்னர், தேயிலை மற்றும் மிளகு மீள் ஏற்றுமதி நிறுத்தப்படும்- மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்
 | 

இலங்கையில் தேயிலை, மிளகு ஏற்றுமதிக்கு தடை - மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு


இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குப் பின்னர், தேயிலை மற்றும் மிளகு ஏற்றுமதி நிறுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை மூட்டைகளில் வண்டுகள் இருந்ததாகக் கூறி, இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம், தேயிலை மீதான தடையை ரஷ்யா நீக்கியது. ஆனாலும் இலங்கை தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் சில வர்த்தகர்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பதுளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, "வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருமானத்தை பெற்றுத்தரும் பிரதான ஏற்றுமதிப் பொருள் தேயிலை. எனவே, பெருந்தோட்ட ஏற்றுமதி துறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது.

இலங்கையின் தேயிலை தான் சிறந்த தேயிலை என அனைவரும் அறிவார்கள். எனினும், சில வர்த்தகர்கள் வெளிநாட்டிலிருந்து தரம் குறைந்த தேயிலையை இறக்குமதி செய்து, அவற்றை கலப்படம் செய்து, இலங்கையின் தேயிலையாக அதனை ஏற்றுமதி செய்கின்றனர். இதனால், இலங்கையின் தேயிலைத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே  இலங்கை  ஏற்றுமதி துறையில் சீர்திருத்தங்கள் செய்யும் வரையில், தேயிலை மற்றும் மிளகு ஏற்றுமதி நிறுத்தப்படும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP