இலங்கை கட்சி அலுவலகத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப்பாடல்கள்

இலங்கையில் கட்சி அலுவலகத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப்பாடல்கள்
 | 

இலங்கை கட்சி அலுவலகத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப்பாடல்கள்


இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் ஒரு பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

 வவுனியா மாவட்டத்தின் பண்டாரிக்குளம் பகுதியில் தமிழரசுக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்தில் புலிகளின் புரட்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. 

தேர்தல் காலத்தில் இவ்வாறு புரட்சிப்பாடல்களை ஒலிபரப்பி தாங்கள் விடுதலை உணர்வாளர்கள் என மக்களுக்குத் தெரியப்படுத்தி வாக்குவேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு புரட்சிப்பாடல்களை ஒலிபரப்பி தேர்தலில் வாக்கு பெறும் முயற்சிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தேர்தல் கண்காணிப்பு இயக்கம் ‘கபே’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட மாகாணத்தில் சில கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றது. இது தேர்தல் விதிமுறைகளை மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறும் செயல். மேலும் கட்சிகள் தம்மையும் தமது வேட்பாளர்களையும் முன்னிறுத்தி ஆதரவு தேட முயற்சிக்க வேண்டுமே தவிர, தமது வெற்றிக்காக மக்களின் மனங்களில் தீவிரவாதத்தை விதைக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கூறியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP