கச்சதீவு திருவிழா - இலங்கையிலிருந்து 10,000 பேர் பங்கேற்பு

கச்சதீவு ஆலய திருவிழா - 10,000 இலங்கையர்கள் பங்கேற்பு
 | 

கச்சதீவு திருவிழா - இலங்கையிலிருந்து 10,000 பேர் பங்கேற்பு


ஆண்டுதோறும் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, வரும் பிப்ரவரி மாதம் 23, 24ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை இலங்கையில் இருந்து 10,000 பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என யாழ் மாவட்ட ஆட்சியர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு 1974ம் ஆண்டு இலங்கையுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இங்கு அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத் திருவிழாவுக்கு இரு நாட்டு மக்களும் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. 

அதில் கருத்து தெரிவித்த நா.வேதநாயகன், "கச்சத்தீவில் இம்முறை இரு நாட்டில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இருந்து 10,000 பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை கடற்படை ஏற்றுள்ளது. படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது. 

மேலும் இம்முறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 போலீஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP